நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, கோபிசெட்டிபாளையமே அதிரும் அளவுக்கு மக்கள் கூட்டம் கடல் போல காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில், “யார் யாரோ கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அந்தக் கனவை நீங்கள் நொறுக்கிவிட்டீர்கள்,” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைக் குறிப்பிட்டு, “இந்தத் தொகுதியில் ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் உங்களிடம் ஓட்டு கேட்கும்போது வந்தார். ஆனால், ராஜினாமா செய்யும்போது உங்களிடம் கேட்டாரா?” என்று கேள்வியெழுப்பி அவரை விமர்சித்தார்.
