விரார் மாவட்டம் நரிங்கி படக் பகுதி அருகே தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் ஹர்ஷ் கதம் (17) என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹர்ஷ் கதம் மீது, எதிர்திசையில் வந்த தண்ணீர் லாரி வேகமாக மோதியது. திடிரென ஏற்பட்ட இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலின்ஜ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் லாரியை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வசாய்–விரார் பகுதியில் தண்ணீர் லாரிகள் மிகுந்த வேகத்தில் மற்றும் பொறுப்பற்ற முறையில் இயக்கப்படுவது தொடர்பாக பொதுமக்கள் ஏற்கனவே பல முறை புகார் எழுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், போக்குவரத்து கண்காணிப்பை வலுப்படுத்தவும், லாரி இயக்கத்தை கட்டுப்படுத்தவும் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.