தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பயணத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், அதிமுக உட்படப் பல்வேறு மாற்றுக்கட்சியினர் அடுத்தடுத்துத் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (நவ. 29) அதிமுகவின் கடலூர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் S.அபித்பத்மாவதி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தவெகவின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் EMR.S.விஜய் அவர்களை வரவேற்று, கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் மகளிர் அணி நிர்வாகிகளும் தவெகவுக்குத் தாவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது