ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென வலதுபுறம் திரும்பி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முதல் மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளது.

இந்த கோரமான விபத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் உட்பட நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், பின்னர் அருகில் இருந்த ஒரு கடைக்குள் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தின் அதிர்ச்சியில் மக்கள் சிதறி ஓடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.