நடிகர் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) இன்று (நவ. 28) கோவாவில் நடைபெறும் 56வது சர்வதேசத் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழ மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 50 ஆண்டுகள் திரைப்படப் பயணம் 10 ஆண்டுகள் போல் கடந்துவிட்டது. 100 ஜென்மங்கள் எடுத்தாலும் நான் ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
