‘பராசக்தி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை குமாரி கமலா (Kumari Kamala) தனது 91வது வயதில் காலமானார். “ஓ ரசிக சீமானே, ஆடுவோமே பள்ளிப் பாடுவோமே” உள்ளிட்டப் பல பாடல்களுக்கு இவர் ஆடிய ஆட்டத்தைக் காணாத ரசிகர்கள் இருக்க முடியாது.
70 ஆண்டுகளுக்கு முன்பு PAN INDIA ஸ்டாராகத் திகழ்ந்த குமாரி கமலா, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘பராசக்தி’, ‘பாவா விளாகம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ள இவர், பல மொழிகளிலும் ரசிகர்களைச் சம்பாதித்தவர். இறுதிச் சில காலத்தைக் கமலா அவர்கள் அமெரிக்காவில் கழித்து வந்த நிலையில், அங்கு வயது மூப்பால் காலமானார்.
