ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொண்டபோது பெண் ஒருவர் செய்த வேடிக்கையான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்தப் பெண் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்ட முயற்சிக்கிறார். பின்னால் இருந்த நபர் ஏதோ விளக்கிக் கொண்டிருக்க, அந்தப் பெண் ஆக்ஸிலரேட்டரைத் திருகியதும், ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. ஸ்கூட்டரின் வேகம் அதிகம் இருந்ததால், அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கூடப் பின்தொடர முடியவில்லை.

“>

 

இந்த விபரீதத்தைப் பார்த்த இணையவாசிகள், “இது ஒரு ஸ்கூட்டர் அல்ல, ஏவப்பட்ட ஏவுகணை” என்று நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண் நலமாக இருப்பாள் என்று நம்புவதாகவும், வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்பவர்கள் முதலில் பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டரைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.