புயல் காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகை , புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் தட்பவெப்பநிலை சீர்குலைவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் விடுமுறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
