ஜான்பூர் மாவட்டம் பத்லாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலுவாஹி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், வகுப்பறைக்குள் ஒரு பெண் ஆசிரியர் சிறுவர்களை தொடர்ந்து அறைந்துக்கொண்டிருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
வைரலான வீடியோவில், குறித்த ஆசிரியை பல மாணவர்களை அடித்துக்கொண்டே, “1–2 மாதமாக டெஸ்ட் நடக்கிறது… அதே கேள்விகளையே கேட்டிருக்கிறேன்… எல்லா பொறுப்பும் என்னதான்? படிக்கவே இல்லை!” என்று கோபத்துடன் கத்துவது கேட்கிறது.
இந்த காட்சி பரவியதையடுத்து, பெற்றோர்களும் குடியிருப்பாளர்களும் பள்ளியை எதிர்த்து கடும் கோபம் வெளியிட்டுள்ளனர். சிறுவர்கள் பயந்துபோன நிலையில் காணப்படும் இந்த காணொளி, “ஆசிரியரின் விரக்தி குழந்தைகள் மீது பொங்கியுள்ளது” என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
जौनपुर
👉 बदलापुर कोतवाली क्षेत्र के भलुआही गांव स्थित एल.बी.एस पब्लिक स्कूल की महिला टीचर द्वारा बच्चों की बेरहमी से पिटाई का वीडियो सोशल मीडिया पर वायरल हुआ है।
👉 वीडियो में टीचर की पिटाई देखकर लोगों में गुस्सा फूट पड़ा है और भलुआही गांव में हड़कंप मच गया है।
👉 अभिभावक और… pic.twitter.com/YG0ygtJBZg— लोकमंच न्यूज़ | Lokmanch News (@lokmanchnewstv) November 27, 2025
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததின்படி, வீடியோ பரவலாக பரவியதையடுத்து போலீசார் சம்பவத்தை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காணொளியின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது என்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பெரும் கோபத்தை எழுப்பியுள்ளது. பல பயனர்கள்,
“குழந்தைகள் மீது இப்படிக் கொடுமை செய்ய அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தனர்?”,
“ஸ்கூல் பாதுகாப்பான சூழல் தரவேண்டும்; பயமுறுத்தும் இடமாக மாறக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் ஆசிரியையை ஆதரிக்கும் விதமாக, “இன்றைய குழந்தைகள் பெற்றோரைக் காட்டிலும் ஆசிரியரைப் பயந்து கேட்பார்கள்… சிறிதளவு ஒழுக்கம் தேவையானது”
என்றும் கருத்து கூறியுள்ளனர். மேலும் சிலர் “அந்த காலத்தில் இவை சாதாரணம்… இருந்தாலும் ஆசிரியர்களை மதித்துப் பயின்றோம்”
என்று பதிவிட்டுள்ளனர்.
