பெங்களூரைச் (Bengaluru) சேர்ந்த ஒரு இளைஞர், தான் செய்து வந்த கார்பரேட் வேலையை (Corporate Job) இழந்தபோது, அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் (Depression) இருந்து மீண்டு வர முடியாது என்று முதலில் எண்ணியுள்ளார்.
ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, வாழ்க்கையின் ‘உண்மையான நோக்கம்’ (Real Purpose) என்னவென்பதை உணர்ந்து, தற்போது ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள நிலையில், அவர் பகிர்ந்த வாழ்க்கைத் தத்துவங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Bangalore, Man from corporate job, to giving up on life to now driving an Auto Rickshaw
and He has message for people about life and money pic.twitter.com/dNcyue9Zhh
— Woke Eminent (@WokePandemic) November 27, 2025
வாழ்க்கையில் வரும் சவால்களில் (Challenges) இருந்து ஓடி ஒளிவதாலோ அல்லது அவற்றைத் தவிர்ப்பதாலோ எந்தப் பயனும் இல்லை என்று அந்த இளைஞர் தனது வீடியோவில் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும், நாம்தான் அதைக் கையாள வேண்டும் என்றும், நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேறு யாரும் வரமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கை உங்களைப் பின்னால் தள்ளினாலும், நீங்கள் கீழே விழுந்துவிடக் கூடாது; மீண்டும் எழுந்து நின்று, வெற்றி பெறும் வரைப் போராட வேண்டும்” என்று முன்னாள் கார்பரேட் ஊழியரான இந்த ஆட்டோ ஓட்டுநர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
