வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயலின் தாக்கம் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) ரெட் அலர்ட்டைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (நவம்பர் 29, சனிக்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே புயலின் எதிரொலியால், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளைக்கு (நவ.29) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கனமழை மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.