​இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் ராஞ்சியில் நவம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் நேற்று (நவம்பர் 27, வியாழக்கிழமை) இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோருக்கு தோனி விருந்து அளித்துள்ளார்.

“>

 

டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இந்த ‘தல – கோலி’ சந்திப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. விருந்துக்குப் பிறகு, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியே தனது காரை ஓட்டி, விராட் கோலியை அணியின் ஹோட்டலில் இறக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.

“>

 

மைதானத்துக்கு வெளியே இரு ஜாம்பவான்கள் காட்டிய இந்த நட்பு, வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.