ரயிலில் பயணிக்க சரியான பயணச்சீட்டு (Ticket) இல்லாத ஒரு பயணியை, TTE (Travelling Ticket Examiner) அதிகாரி ஒருவர் மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் வன்முறையாக இழுத்துத் தள்ளி மிரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் ஊழியர்களின் நடத்தை மற்றும் பயணிகளின் உரிமைகளின் எல்லைகள் குறித்து இந்தச் சம்பவம் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், ஆண் TTE ஒருவர் பயணியின் காலரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதைக் காணலாம். அந்தப் பயணி தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடியபோதும், அந்த அதிகாரி அவரைத் தொடர்ந்து தரதரவென இழுத்து மிரட்டுகிறார்.
View this post on Instagram
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பதிவில், “சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் (Offence) தானே தவிர, கிரிமினல் குற்றம் (Crime) அல்ல; இதற்காக யாரும் இப்படித் தாக்கப்படவோ அவமானப்படுத்தப்படவோ கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செயல் குறித்துப் பலரும் TTE-ஐ விமர்சித்துப் பணிநீக்கம் (Suspension) செய்யக் கோரியுள்ளனர். அதேசமயம், சிலர் “டிக்கெட் எடுக்காமல் ஓட முயற்சிக்கும் பயணிகளைச் சமாளிக்க, அதிகாரிகளுக்கு இது போன்ற தீவிரம் தேவைதான்” என்று வாதிட்டு, TTE-க்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் ரயில்வே துறையிடமிருந்து இதுவரை வெளியாகவில்லை.
