புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற வெளிப்படையான சுகாதார அபாயங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம், ஆனால், தினசரி பழக்கங்களில் ஒன்றான மன அழுத்தம் (Stress), இந்த இரண்டுக்கும் விட மிகவும் ஆபத்தானது என்று மும்பையைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரும், சுகாதாரக் கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா எச்சரித்துள்ளார்.

“மது மற்றும் சிகரெட் உங்களைக் கொல்லாது; மன அழுத்தம் தான் கொல்கிறது” என்று அவர் கூறுகிறார். மன அழுத்தம் என்பது வெறும் மன ரீதியானது மட்டுமல்ல, அது ஒரு ‘முழு உடல் எதிர்வினை’ ஆகும். நாம் சோர்வாகவும், அழுத்தமாகவும் உணரும்போது, உடல் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் என்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது என்று டாக்டர் மனன் வோரா விளக்குகிறார்.

மன அழுத்தத்தின் ஆபத்தான அறிகுறிகளாக முதுகுவலி, தலைவலி, தசை இறுக்கம், தோள்பட்டை பிடிப்பு மற்றும் பற்களைக் கடித்தல் போன்ற உடல்ரீதியான சமிக்ஞைகளைக் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர் வோரா வலியுறுத்துகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dr. Manan Vora (@dr.mananvora)

“>

சரியான உறக்கம் இல்லாமல் இருந்தால், இந்த ஆபத்து மேலும் பலமடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். “குறைந்தது 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் உடல் முழுமையாக மீண்டு வர வாய்ப்பே கிடைக்காது.

நேற்றைய அழுத்தத்துடன் இன்றைய அழுத்தத்தையும் சேர்த்துக் கொண்டு சுமப்பதால், அது நாள்தோறும் பெருகுகிறது” என்று அவர் கூறுகிறார். ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான் மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து, தசைகள் ஓய்வெடுத்து, உடலின் திசுக்கள் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் என்றும் டாக்டர் மனன் வோரா தெரிவித்துள்ளார்.