உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், உயிருக்குப் போராடிய நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற அரசு ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து, சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னால் சென்ற கார் ஓட்டுநருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பியும், அதனைப் பொருட்படுத்தாமல் கார் ஓட்டுநர் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

<a href=”http://

“>
“உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்பட்ட நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் கொண்டு சென்றது. தொடர்ச்சியான சைரன் ஒலிக்கும்கூட கார் ஓட்டுநர் வழிவிட மறுத்தது மனிதநேயமற்ற செயல்,” என காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் துவேதி தெரிவித்ததாகச் செய்தி முகமை பி.டி.ஐ. தெரிவித்துள்ளது.