துபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று, இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இந்தத் தேஜஸ் விமானத்தில் ஆயில் கசிவு இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த விபத்து நடந்திருப்பது சோகத்தை அதிகரித்துள்ளது.

 

விமான விபத்து தொடர்பான காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.