சவுதி அரேபியாவில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான பஸ் விபத்தில், மொத்தம் 45 இந்தியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்பத்தில் 42 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தின் மிகக் கொடூரமான சோகம் என்னவென்றால், பலியான 45 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் பெண்களும் அடக்கம். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
