அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்தியலிங்கம், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. அத்துடன், அவர் அ.தி.மு.க.வில் இணைந்தால் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவல் குறித்து வைத்தியலிங்கம் அவர்கள் உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வைத்தியலிங்கம் அவர்கள் இந்தத் தகவல்கள் குறித்துக் கூறுகையில், “நான் அ.தி.மு.க.-வில் இணையப் போகிறேன் என்கின்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது” என்று விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம், அவர் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் அணியிலேயே நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இரண்டாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க.வின் அணிகளை ஒன்றிணைக்க, பா.ஜ.க. மற்றும் பல்வேறு தலைவர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், வைத்தியலிங்கத்தின் இந்த திட்டவட்டமான மறுப்பு, அ.தி.மு.க. இணைப்புப் பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கலை மேலும் நீட்டிப்பதாகவே கருதப்படுகிறது.