மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த ஒரு சிறிய கவனக்குறைவு, பெரிய விபத்துக்கான சூழ்நிலையை உருவாக்கிய பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் ஒரு குழந்தையுடன் நின்று கொண்டிருந்தபோது, அவர்கள் அருகில் இருந்த ‘பேபி ஸ்ட்ரோலர்’ (Baby Stroller) மெதுவாகத் தானாகவே நகரத் தொடங்கி, பிளாட்பாரத்தின் விளிம்பை அடைந்து தண்டவாளத்தில் (டிராக்) விழுந்தது. சரியாக அதே நேரம், எதிரே ஒரு மெட்ரோ ரயில் வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
The stroller was left unattended for a moment and rolled itself to the edge of the platform, falling directly into an approaching train. Fortunately the baby was held in the arm before that. pic.twitter.com/dRbTrX6aB0
— Kitten (@0nlyk1tt3n) November 10, 2025
பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் அனைவரும், ஸ்ட்ரோலரில் குழந்தை இருந்திருக்கும் என்று நினைத்து, அந்தச் காட்சி கண்டதும் பயத்தில் அலறினர்.
அனைவரும் ஓடிச் சென்றபோதுதான், குழந்தை அந்த ஸ்ட்ரோலரில் இல்லை என்பதும், அது அங்கிருந்த மற்றொரு பெண்ணின் கைகளில் பாதுகாப்பாக இருந்தது என்பதும் தெரியவந்தது.
இதைக் கண்ட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த இணையவாசிகள், ஒரு வினாடி கவனக்குறைவு எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று குறிப்பிட்டு, மெட்ரோ ரயில் நிலையங்களில் அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
