சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஒரு ஊழியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது 16,000-க்கும் அதிகமான அடிகள் நடந்து, காயம் குறித்து நாடகமாடியதாகக் கூறி நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், மீண்டும் ஊழியர் உரிமைகள் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. சென் என்ற அந்த ஊழியர் 2019 ஆம் ஆண்டில் முதுகு மற்றும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விடுப்பு எடுத்து, அதற்குரிய மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தார்.

விடுமுறையைத் தொடர்ந்து நீட்டித்ததால், சென் பொய் சொல்வதாகச் சந்தேகித்த நிறுவனம், அவரைப் பணி நீக்கம் செய்தது. இந்தச் சம்பவம் குறித்துச் சீன நீதித்துறை அமைச்சகம் அக்டோபர் 29 அன்று மீண்டும் விவாதித்த நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய பேசுபொருளானது. பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆரம்ப விசாரணையில், சென் காயம் அடைந்தது உண்மைதான் என்று அதிகாரிகள் தீர்ப்பளித்து, நிறுவனத்திற்கு 1,18,779 யுவான் (சுமார் $16,700) இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, சென் ஒரே நாளில் 16,000 அடிகள் நடந்ததற்கான சான்றாகக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சேட் பதிவுகள் போன்றவற்றை நிறுவனம் தாக்கல் செய்தது. இருப்பினும், நீண்ட விசாரணைக்குப் பிறகு, சென் பொய் சொன்னதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றும், மருத்துவ அறிக்கைகள் அவர் உண்மையில் காயமடைந்ததையே காட்டுகின்றன என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, நிறுவனத்தின் பணி நீக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்த நீதிமன்றம், சென்னுக்கு இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.