இன்றைய இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு ‘ரீல்ஸ்’ வீடியோவை உருவாக்குவதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுகின்றனர். தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் டிராக்டரில் அதிர்ச்சியூட்டும் வகையில் சாகசம் செய்கின்றனர்.
டிராக்டரின் முன் சக்கரங்கள் காற்றில் உயர்ந்துள்ள நிலையில், டிரைவர் திடீரென டிராக்டரை விட்டு இறங்கி, சக்கரங்கள் காற்றில் மிதந்தவாறே ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் முன்பகுதி (பொனெட்) மீது ஏறி நின்று விடுகிறார். அப்போது டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாத நிலையில், இரு இளைஞர்களும் தாங்கள் ஏதோ ஆக்ஷன் படத்தின் ஹீரோக்கள் போலக் கருதி இந்த அபாயகரமான ஸ்டண்டில் ஈடுபட்டுள்ளனர்.
रिल्स के चक्कर में जान से खेल जाना समझदारी नहीं, पागलपन है।
लोग पहले स्टंटमैन बनते थे फिल्मों में…
अब हर गली में रीलमैन घूम रहे हैं 😎
रील बनाओ, लेकिन जान मत गंवाओ भाई! pic.twitter.com/Var5T7oGbV— TANVEER (@mdtanveer87) November 8, 2025
இந்த ஆபத்தான ஸ்டண்ட் வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது. “இது சாகசம் அல்ல, முட்டாள்தனம்!” என்றும், “இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்,” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘ரீல்ஸ்’ ஆசையில் தங்கள் உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி, “ஒரு சிறிய தவறு கூட இவர்களின் உயிருக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம்,” என்று பலரும் எச்சரித்துள்ளனர்.
இந்த வீடியோ 9 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “லைக்ஸ்களுக்காக உயிரைப் பணயம் வைக்காதீர்கள், கொஞ்சம் புத்திசாலித்தனம் காட்டுவதே பெரிய ஸ்டைல்,” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
