இமாச்சலப் பிரதேசம், காங்க்ரா மாவட்டம், டேராவில் உள்ள சப் டிவிஷனல் அலுவலகம் வெளியே, ஒரு பெண் முதியவர் மீது எண்ணெய் ஊற்றித் தாக்கியதுடன், அவரை செருப்பு மாலை அணிவித்துக் கௌரவக் குறைச்சல் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரக்கர் தாலுகாவைச் சேர்ந்த தேஷ்பந்து என்ற முதியவர், நீதிமன்ற வழக்கு தொடர்பாக அலுவலகத்திற்கு வந்தபோது, மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா தேவி என்ற பெண் அவரை வழிமறித்து, திடீரென அவர் மீது எண்ணெய் வீசி, அவரது ஆடைகள் மற்றும் தலைமுடி முழுவதையும் நனைத்துள்ளார்.
Whatever the issue may be, who gave this woman the right to attack an old man in broad daylight? If the roles were reversed, it would have been a national issue by now. And this is happening in the CM’s own home district, Dehra Hamirpur. pic.twitter.com/C671rPnpdB
— Nikhil saini (@iNikhilsaini) November 7, 2025
பின்னர், அவர் அணிந்திருந்த காலணி மாலையை முதியவரின் கழுத்தில் கட்ட முயன்றதோடு, அவரை பலமுறை அறைந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் தலையிட்டுப் பெண்ணைத் தடுத்து நிறுத்திக் கட்டுப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில், இந்தத் தாக்குதல் பழைய நிலத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஆஷா தேவியை போலீஸார் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
