உடல்ரீதியான சவால்கள் இருந்தாலும், உறுதியான மனமும் தன்னம்பிக்கையும் இருந்தால் எத்தகைய சாதனைகளையும் படைக்க முடியும் என்பதற்குச் சான்றாக, இரு கைகளும் இல்லாத இளைஞர் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி அனைவரின் மனதையும் வென்றுள்ளார். இந்த 25 வினாடி வீடியோவில், இளைஞர் ஒருவர் அசாதாரண வேகத்தில் பைக் ஓட்டிச் செல்வதைக் காணலாம் . அருகில் சென்று பார்க்கும்போது தான் அவருக்கு இரு கைகளும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

எனினும், அவர் பைக்கின் மீது வைத்திருக்கும் சரியான பிடிப்பு மற்றும் கட்டுப்பாடு காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தச் சவாலான செயலை அவர் சர்வ சாதாரணமாகச் செய்வது, கடினமான சூழ்நிலையிலும் ஒருவர் அடையக்கூடிய வெற்றியை எடுத்துக்காட்டுகிறது என்று @Digital_khan01 என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “வரம்புகள் உடலிலில்லை, தன்னம்பிக்கையில்தான் உள்ளன” என்று ஒரு பயனர் பாராட்ட, “இது அதிசயமான திறமை, ஆனால் இது விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தையும் கொண்டது” என்று மற்றொருவர் கவலை தெரிவித்துள்ளார்.