சென்னையில் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில், விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதேபோன்று, மர்ம நபர் ஒருவர் நடிகர் விஷால், இயக்குனர் மணிரத்னம் மற்றும் பல முன்னணி சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் சென்னையில் திரைத்துறையினரிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
