விஷ்ணு விஷால் நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு தரமான கமர்ஷியல் படமாக இது அமைந்துள்ளதாகப் படம் பார்த்த அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தின் சிறப்பம்சமாக, நடிகர் விஜய்யின் ‘கில்லி’ படப் பாடலான ‘அப்படிப் போடு’ அந்த சீனுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தப் படத்தில் ஒரு காட்சி விஜய் மற்றும் திரிஷாவை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாகச் சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. அந்தக் காட்சியில் நடிகை மோக்ஷா அணிந்திருந்த புடவையின் நிறம், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் விஜய்யுடன் சென்றபோது திரிஷா அணிந்திருந்த புடவையைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Vishnu Vishal சம்பவக்காரன் 😂😂 pic.twitter.com/08C9rQ3G0w
— நாய்க்குட்டி (The Dog) (@KuttyNaai_) July 3, 2026
“>
ஏற்கனவே விஷ்ணு விஷால் மீது விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், தற்போது இந்த புடவை விவகாரத்தை வைத்துப் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இது படத்தில் இருவரையும் கலாய்க்கும் நோக்கில் வைக்கப்பட்ட காட்சியா அல்லது தற்செயலாக அமைந்ததா என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன.
