தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்

அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஓ.பி.எஸ். ஆதரவு அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், இன்று (நவ. 4) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன்னை தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.

அப்போது, அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி வாழ்த்தினார். தி.மு.க.வில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், “அ.தி.மு.க. தற்போது பாரதிய ஜனதாவின் கிளைக் கழகமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். திராவிடக் கொள்கையை உண்மையாகப் பின்பற்றக்கூடியது தி.மு.க. என்பதால் தான் அக்கட்சியில் இணைந்ததாகவும்” தெரிவித்தார்.

மேலும், இன்று மாலை 4 மணிக்குத் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும் தகவல் வெளியான நிலையில், அதன்படி சட்டப்பேரவையில் சபாநாயகர் மு. அப்பாவுவை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கியது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.