தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அட்டவணையை வெளியிட்டார். இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, 11ஆம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான தேதிகளும் இதோடு வெளியிடப்பட்டன.


வெளியான அட்டவணைபடி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேசமயம், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுத் தேதிகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளனர்.
