நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) நிர்வாகிகளுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த வியூகங்களை வகுத்து ஆலோசனை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பிரத்யேகக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கரூர் பகுதியில் அண்மையில் நடந்த சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியாகச் சட்டச் சிக்கல்கள் எழுந்த பின்னணியில், தொண்டரணிக்கு ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற IG ரவிக்குமார் தலைமையில் இந்தக் குழு இணைந்துள்ளது. உளவியல் பிரிவு உட்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனுபவமிக்க அதிகாரிகளான ஓய்வு பெற்ற DSP-க்கள் சஃபியில்யா, சிவலிங்கம் மற்றும் ADSP அசோகன் (ஓய்வு) ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இது, பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைச் சமாளித்தல் மற்றும் அரசியல் ரீதியான நிர்வாக ஆலோசனைகளை வழங்குதல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது
