ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் (Tim David) இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்து, 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் அசுரத்தனமாக 74 ரன்கள் விளாசினார்.

வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் டிராவிஸ் ஹெட்டைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரது இன்னிங்ஸில், பந்து மைதானத்தை விட்டு வெளியேற இருந்தும் ‘ ஸ்டேடியம்’ விளம்பரப் பலகையில் மோதி உள்ளே திரும்பிய ஒரு ஷாட்டும் அடங்கும்;

 

View this post on Instagram

 

A post shared by cricket.com.au (@cricketcomau)

“>

அதேபோல் அவர் அடித்த சிக்ஸ்களில் ஒன்று 129 மீட்டர் தூரம் பயணித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவை சவாலான ஸ்கோரை (186/6) எட்ட உதவியது.