வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல், நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வை பொறுத்து அதன் தாக்கம் குறித்து கணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது. புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில், இடை இடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புயல் சின்னம் சென்னை நகரிலிருந்து 970 கி.மீ. தொலைவில் வளி மண்டலத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
