ஆந்திர மாநிலம் கர்னூலில், அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை நடந்த பயங்கர பேருந்து தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதில், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், பைக் ஓட்டுநர் சிவசங்கர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தில் மற்றொரு நபருடன் வருவதை காண முடிகிறது. அவர்களது நடத்தை மற்றும் அப்போது இருந்த நிலைமைகள், குடிபோதையில் வாகனம் ஓட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழும்பட செய்துள்ளது.
నిన్న బస్ ఫైర్ Accident కి కారణం అయిన వ్యక్తి.. మద్యం మత్తులో పెట్రోలు పంపు నుంచి వెళ్లిన cc footege.
వీడి కారణంగా 19 మంది అగ్నికి ఆహుతి అయ్యారు..#BusAccident #Kurnoolbusaccident #Kurrnool pic.twitter.com/KiJHanUNwP
— @RKR (@krishnadevaansh) October 25, 2025
“>
அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை 2:22 மணி என சிசிடிவி கிளிப்பில் நேரம் உள்ளது, இது அதிகாலை 2:30 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை விபத்து நடந்ததாக காவல்துறை குறிப்பிடும் காலவரிசைக்கு ஏற்ப வருகிறது.. அதே நேரத்தில் பைக் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததும், திடீரென வேகத்தை அதிகரித்ததும், அதனால் ஏற்பட்ட சாலையிலான மோதலும் பின்னர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தும் தொடர்புடையவையாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். சம்பவத்துக்குப் பிறகு, உயிர் பிழைத்தவர் என்.ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பேருந்தை ஓட்டிய இரு ஓட்டுநர்களின் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
The CCTV video of the biker who is involved in #Kurnool #BusAccident 😔
Looks like #drunk 😶
Reason for 19 #innocent 😥 lifes 😫#FireAccident #BusAccident#Hyderabad #bangalore pic.twitter.com/VnED4tEtKT
— cherry_Vibes😎 (@CAdusumall41381) October 25, 2025
“>
பேருந்து ஓட்டுநர் சிவநாராயணா முதலில் தனது தவறு ஏற்காத நிலையில், பின்னர் மோதிய இருசக்கர வாகனமே விபத்துக்குக் காரணம் என கூறியதால், இந்த வழக்கு மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. சிசிடிவி காட்சிகளும், ரமேஷின் புகாரும், இவ்விபத்தில் பைக் ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமும் சேர்ந்து இந்த துயரச் சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றது. தற்போதைய நிலையில், போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
