கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் மூவர் பலியாகி, நான்கு பேர் காயமடைந்தனர். விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் 21 வயது இந்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல், ஒன்டாரியோவில் மேற்கு நோக்கிச் செல்லும் 10 ஃப்ரீவேயில் (Highway 10) இந்த விபத்து நடைபெற்றது. ஏபிசி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்த சம்பவம் 15 ஃப்ரீவேயின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்தது. அதே செமி-டிரக் வாகனத்தின் டேஷ்கேமில் இந்த பயங்கர விபத்து பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளில், ஒரு சரக்கு வண்டி , முன்னால் சென்ற SUV வாகனத்தின் பின்புறத்தில் மோதிய பின், அதே பாதையில் இருந்த பல வாகனங்களில் மோதி சிதறிய காட்சிகள் தென்படுகின்றன.

 

இந்த வீடியோ தற்போது நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வடக்கு கலிபோர்னியாவின் யூபா நகரத்தைச் சேர்ந்த 21 வயது ஜஷான்ப்ரீத் சிங் எனும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதுடன், வாகன ஆணவக் கொலை (Vehicular Manslaughter) குற்றச்சாட்டுகளும் அவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சட்ட அமலாக்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது, சிங் 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்து, தற்போது சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருந்ததாக ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. “சிங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பின் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் போதைப்பொருளின் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது” என்று கலிபோர்னியா ஹைவே போலீஸ் (CHP) அதிகாரி ரோட்ரிகோ ஜிமெனெஸ் கூறினார். பலியானவர்களில் ஒருவர் அப்லாண்டைச் சேர்ந்த 54 வயது நபர் என அதிகாரிகள் தெரிவித்தனர்; அவரது பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் உயிரிழந்த மற்ற இருவரின் அடையாளமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.