தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா. இவர் ஏராளமான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது தம்பி சபேஷ். இவரும் இசையமைப்பாளர். இவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் தேவாவின் சகோதரர்கள் சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் இணைந்து தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தினர் மற்றும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
