தமிழ் சினிமா வரலாற்றில் சில படங்கள் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. அதில் ஒன்று, 2004-ம் ஆண்டு வெளியான  காதல்’ திரைப்படம். காதல் தோல்வியை மையமாகக் கொண்ட இந்தப் படம், அப்போது இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்தப் படத்தில், நடிகர் பரத் மற்றும் சந்தியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். உணர்ச்சி பூர்வமான கதை, இயல்பான நடிப்பு, இசை — அனைத்தும் சேர்ந்து ‘காதல் படத்தை  ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிற்கும் படமாக மாற்றின.

அந்தப் படத்தில் சிறிது நேரம் மட்டுமே தோன்றிய ஒரு குழந்தை நட்சத்திரம் தனது நகைச்சுவையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. குறுகிய வேடம் என்றாலும், அவரது கலகலப்பான உரையாடல்கள் அப்போது ரசிகர்களை சிரிக்க வைத்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ambani Shankar ✨ (@ambanishankar)

இப்போது அந்தச் சிறுவன் பெரியவனாகி விட்டார். அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. படத்தில் நடித்திருந்த சிறுவன் இன்று இளமைத் ததும்பும் தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் பலரும், “காலம் எவ்வளவு வேகமாகப் போய்விட்டது!”, “இவர்தானா அந்த ‘ சிறுவன்?” எனக் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்தக் குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, பழைய நினைவுகளை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.