தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் கதாநாயகி, குண சித்திர வேடங்கள், காமெடி கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் நடித்து அசத்தியவர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வந்த மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார்.

இவரது இழப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் மனோரமாவின் மகன் பூபதி இன்று காலை 10:30 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். இவர் மனோரமாவுக்கு ஒரே ஒரு மகன். இதில் பூபதி குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு சில படங்களில் நடித்தும் அது அவருக்கு போதிய அளவு வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை. மேலும் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.