மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஒரு பழ வியாபாரியின் கடையில் இருந்து ₹2 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
வீடியோ காட்சிகளின்படி, இரண்டு பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நேராக டிராயருக்குச் சென்று, தனது கூட்டாளியிடம் வழியில் நிற்கசொல்கிறார். பின்னர் டிராயரை உடைத்து, உள்ளிருந்த பணம் மற்றும் சில மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் சென்றார். அதன்பின் மற்றொரு டிராயரையும் உடைக்க முயன்றபோது தோல்வியடைந்ததால், இடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.
#WATCH | ₹2 Lakh Stolen From Fruit Trader’s Shop In #Jabalpur, Theft Caught on CCTV #MPNews #IndiaNews #MadhyaPradesh pic.twitter.com/JTuuTap2W7
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 22, 2025
இந்த சம்பவம் ஜபல்பூரின் கிருஷி மண்டி (விவசாய சந்தை) பகுதியில் அமைந்துள்ள கடையில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடையின் உரிமையாளர் ஹேம்ராஜ் பஹாரே, இதுகுறித்து கூறியதாவது:
தீபாவளி பூஜைக்காக நான் ஊழியர்களுடன் சேர்ந்து கடையில் பூஜை செய்தேன். அதற்காக பணப் பெட்டியில் ₹2 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கத்தை வைத்திருந்தேன். மறுநாள் காலை திரும்பி வந்தபோது, பெட்டி உடைக்கப்பட்டு பணம் காணாமல் போயிருந்தது,” என்றார்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு திருடர்கள் கவுண்டரை உடைத்து பணத்தை எடுத்துச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது என்றார். இது தொடர்பாக ஹேம்ராஜ் பஹாரே உடனடியாக விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் போலீசார் தற்போது சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு, பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
