சென்னையில் இன்று (அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். நகரத்தின் சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்திருந்தார். மழை காரணமாக சிலரும் விடுமுறை எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்புகள் தெளிவை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.