தீபாவளிக்கு பிறகு நாடு முழுவதும் அமைதி சூழ்ந்திருந்தாலும், குஜராத்தின் டாகோர் என்ற பகுதியில் உள்ள பிரபல கோவிலில் வித்தியாசமான பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
250 ஆண்டுகளாக இந்த கோவிலில் அன்னதானம் என்ற சிறப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், பகவான் கிருஷ்ணருக்காக சுமார் 3,000 கிலோ தானியங்கள், மிட்டாய், பூந்தி, சோறு, பழங்கள் போன்றவற்றுடன் பிரமாண்டமான பிரசாதம் தயார் செய்யப்படுகிறது.
இதனை மற்ற கோவில்களில் போல பக்தர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, கோவில் கதவுகள் திறக்கப்படும் வேளையில், பக்தர்கள் தாங்களே ஓடி வந்து அந்த பிரசாதங்களை எடுத்து செல்லும் பாரம்பரியம் உள்ளது.
Kheda, Gujarat: In Dakor, Gujarat, a centuries-old tradition sees over 3,000 kg of Annakut offered to Lord Ranchhodrai on Diwali’s second day. Villagers from 80 nearby villages “loot” the prasad, ensuring safety with police, then share it among themselves pic.twitter.com/yZXni1HoPw
— IANS (@ians_india) October 21, 2025
“>
இந்த ஆண்டும், தீபாவளிக்கு பிறகு கோவில் கதவுகள் திறக்கப்பட்ட உடனேயே சுமார் 80 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஜெய் ரண்சோட்” என்று முழங்கிக் கொண்டு கோவிலுக்குள் ஓடிவந்தனர். வெறும் 10 நிமிடங்களில் 3,000 கிலோக்கும் மேற்பட்ட பிரசாதம் முழுவதும் எடுக்கப்பட்டுவிட்டது.
இந்த கூட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பாக்கியம் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த பாரம்பரிய திருவிழா, பக்தர்களின் ஆனந்தக் கடலாக மாறியுள்ளது
