சமூக வலைதளங்களில் வித்தியாசமான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அதேபோல், சமீபத்தில் ஒரு நபர் ஆற்றில் மிதக்கும் பாசியால் தோசை போல் உணவு தயாரித்த வீடியோ இணையத்தை அதிரவைத்துள்ளது.

https://www.instagram.com/reel/DP6oglwjxKI/?igsh=czdrMjYzeWZ0OGt4

வெறும் 48 மணி நேரத்திற்குள் இந்த வீடியோக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. வீடியோவில் அந்த நபர் ஆற்றிலிருந்து பாசியை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து நன்கு கழுவி அரைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி தோசை போல் வறுத்து சுவையுடன் சாப்பிடும் காட்சி காணப்படுகிறது.

அந்த நபர் “இது ரொம்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது” என்று கூறி தன் குடும்பத்தினருக்கும் சாப்பிட வைத்துள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிலர் இதை “அற்புதமான யோசனை” என பாராட்டியுள்ளதுடன், சிலர் “இதுபோல் பாசியை சாப்பிடுவது அருவருப்பாக இருக்கிறது” என விமர்சித்துள்ளனர்.

பலரும் இதை “புதிய ஆரோக்கிய உணவுப் புரட்சி” எனக் கூறியுள்ளதுடன், சிலர் இதைப் பார்த்தவுடன் வாந்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உண்மையில், பாசி பல நாடுகளில் “புரோட்டீன் பாம்” எனக் கருதப்படுகிறது. நாசா கூட இதை விண்வெளி உணவாக பயன்படுத்துகிறது.

இதில் புரோட்டீன், இரும்பு, வைட்டமின் B12, மற்றும் ஒமேகா-3 அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் நீர்மூலங்கள் மாசடைந்துள்ளதால், அவை கனிம உலோகங்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், சுத்தமான பாசியை மட்டுமே உணவில் பயன்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.