தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி மகிழ்வித்து வருகின்றன. சில நிறுவனங்கள் வழக்கம்போல இனிப்புப் பெட்டியில் முடித்துவிட்டாலும், சில நிறுவனங்கள் வித்தியாசமான பரிசுகளால் தங்கள் ஊழியர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பலர் தங்கள் அலுவலகத்திலிருந்து பெற்ற தீபாவளி பரிசுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தற்போது ஒரு நிறுவனத்தின் பரிசு தொகுப்பு இணையத்தில் கலக்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் வீடியோவில், ஒவ்வொரு ஊழியருக்கும் 20 கிராம் தூய வெள்ளி நாணயம், ஏர் ஃப்ரையர், காபி மெஷின், பிரீமியம் காபி பவுடர், தாமிர விளக்கு, தேநீர் மெழுகுவர்த்தி, இனிப்புகள் மற்றும் சரும பராமரிப்பு பொருட்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டிருப்பது காணப்படுகிறது.
இது ஒரு சானிட்டரி வெயர் தயாரிப்பு நிறுவனம் என கூறப்படுகிறது. இப்படியான ஆடம்பர பரிசுகளை பார்த்த நெட்டிசன்கள், “நம்ம ஆபீஸ்ல ஒரு இனிப்புப் பெட்டி கூட கிடைக்கல!” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பயனர் @komal_verma._ பகிர்ந்த இந்த வீடியோவுக்கு இதுவரை 1 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன.
https://www.instagram.com/reel/DP1lKfkCLgg/?igsh=MWllcmJ1OW5uNTQ5eA==
“இப்போ நானும் வேற மூலையில் போய்க் கண்ணீர்விடணும்!” என்று ஒருவரும், “இவ்வளவு காபி மெஷின், வெள்ளி நாணயம்… நீ எங்கே வேலை பார்க்குற? நாமும் சேர்வோம்!” என்று மற்றொருவரும் எழுதியுள்ளனர். சிலர் இதை “நிறுவனங்களுக்கிடையிலான தீபாவளி பரிசுப் போர் தொடங்கிவிட்டது!” என சிரிப்பாக பதிவு செய்துள்ளனர்.
