நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். வருகிற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் தற்போது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சனி ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் போன்றவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.