கரூர் துயரச் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசாமல் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், “நாங்கள் இதை சட்டமன்றத்தில் பேசினால் அவை குறிப்புகளில் இருந்து அதை நீக்கிவிடுவார்கள். அதனால் தான் பத்திரிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசுகிறோம்,” என கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் குறித்து அவர் மேலும், “அதிமுக பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்காக வேலுச்சாமி புறத்தில் அனுமதி கேட்ட போது, போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய சாலை காரணங்களால் அந்த இடம் பொருத்தமில்லை என கூறி அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதே இடத்தை பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி அளித்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

“>

இதற்கு மேலாக, “இது திட்டமிட்ட வகையில் அசம்பாவிதம் ஏற்படச் செய்வதற்காகவே நடந்திருக்கலாம் என நான் கருதுகிறேன் ,” என பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், “அரசு தரப்பினர் பல விஷயங்களில் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்; அவர்களின் பதில்களில் தெளிவே இல்லை,” எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்துகளை அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.