“ஒற்றுமையே பலம்” என்ற பழமொழி மீண்டும் ஒரு முறை உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டு விலங்குகளின் உலகத்தில் கூட ஒற்றுமை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், சிங்கம் ஒரு கழுதைப்புலியை பிடித்து வேட்டையாட முயன்றபோது, மற்ற கழுதைப்புலிகள் ஒன்றிணைந்து சிங்கத்தை எதிர்த்து, தங்கள் தோழனை அதின் பிடியிலிருந்து விடுவிக்கின்ற காட்சி பதிவாகியுள்ளது.

 

வீடியோவில் சிங்கம் கழுதைப்புலி பிடித்து அடக்கி வைத்திருக்கும் போது, சில கழுதைப்புலிகள் அதன் அருகே வந்து சத்தம் போட்டு பயமுறுத்த முயல்கின்றன. ஆனால் சிங்கம் விடாமல் பிடித்திருந்ததால், பின்னர் பல கழுதைப்புலிகள் சேர்ந்து சிங்கத்தைச் சூழ்ந்து தாக்குகின்றன. திடீரென நடந்த தாக்குதலில் சிங்கம் பின்னடங்கி, கழுதை பலி விடுவிக்கிறது. இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள் “இது தான் உண்மையான ஒற்றுமையின் சக்தி” எனப் பாராட்டி வருகின்றனர்.

இந்த 24 வினாடிகள் கொண்ட காட்டு வீடியோவை “@AmazingSights” என்ற பக்கத்தில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர். “நரிகள் தோற்றத்தில் பயமுறுத்தினாலும், அவர்களின் குழு ஒற்றுமை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “மனிதர்கள் இப்படி ஒன்றிணைந்தால், உலகமே மாறிவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.