சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ, மனிதநேயத்த்தை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது. பலமாடி குடியிருப்பில் குழந்தை  விளையாடும் போது, ரேலிங்கில் இருந்து தவறி கீழே விழுந்து, பால்கனியின் ஓரத்தில் அபாயகரமாக  தொங்கிக்கொண்டிருந்தது.

இந்நிலையில், கீழே இருந்த பொதுமக்கள் அலறிக் கூச்சலிட்ட நிலையில், திடீரென ஒரு இளைஞர் தனது உயிரை பொருட்படுத்தாமல், கீழே இருந்து பலமாடி உயரம் உள்ள பால்கனி வரை சுவர் ஓரமாக ஏறி சென்றார். பின்னர் அந்த சகுழந்தையை  நேர்த்தியாக கையில் பிடித்து மேலே இழுத்து, பாதுகாப்பாக உள்ளே வைத்தார்.

இந்த வீடியோவில் அந்த வீர இளைஞரின் செயல் காண்போரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தியது. இது போன்ற இக்கட்டான  சூழ்நிலையில் பலர் தைரியத்தைக் காண்பிக்க முடியாத நேரத்தில், அந்த இளைஞர் காட்டிய துணிச்சல் சமூக வலைதளங்களின் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த இடத்தில் உள்ளோர் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சில வினாடிகளில் நடந்த அந்த மனிதநேய செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

“>

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது போல மனிதத்தன்மை கொண்டவர் நம்மில் ஒருவர் என்பதை அறிந்து பெருமையாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளனர். “அந்த இளைஞருக்கு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மனிதநேய விருது வழங்க வேண்டும்” எனவும் கூறியுள்ளனர். இந்த வீடியோ, சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் ஹீரோக்கள் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.