தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுப்படி, 2024-25ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியமாகவும், 1.67% கருணைத்தொகையாகவும் மொத்தம் 10% போனஸ் வழங்கப்படுகிறது. இதில், சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக 11.67% கருணைத்தொகை சேர்த்து மொத்தம் 20% போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பாக, 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5,308 தொழிலாளர்கள் இந்த உதவியில் பயனடைவார்கள் என சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். இந்த போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கும் பணிக்காக ரூ.3.53 கோடியே 37 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
