கரூர் துயரச் சம்பவத்துக்கு பின் வழக்கை எதிர்கொள்வதற்குப் பதிலாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமீபத்தில் நடிகர் விஜய் தனது சமூக வலைத்தளப் பதிவில் “நீதி வெல்லும்” என கூறியதைத் தொடர்ந்து, மீண்டும் பொதுமக்கள் முன் தோன்றியுள்ளார்.
இதனையடுத்து, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு கட்சி நடவடிக்கைகளைப் பற்றி பேசி வருகிறார்கள். அதே நேரத்தில், கட்சியின் பொதுச் செயலாளருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு மாலை அணிவித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு இணையத்தில் வேகமாக வைரலாகி பல்வேறு வட்டாரங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் இடமாகியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி தனது பதிவில், “இறந்தவர்களின் படங்களை வைத்து மலர் வணக்கம் செலுத்தத் துப்பில்ல, வழக்குக்குப் பயந்து ஓடிய ஒருவருக்கு மாலை மரியாதை செலுத்துவது கேடான செயலாகும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இறந்தவர்களின் படங்களை வைத்து ஒரு மலர்வணக்கம் செலுத்தத் துப்பில்லை.
வழக்குக்குப் பயந்து ஓடி ஒளிந்தவருக்கு மாலை மரியாதை ஒரு கேடு! pic.twitter.com/UeATwRYYVK
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) October 15, 2025
“>
அவரது இந்த கூற்றே தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறி, அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
