மதுரை மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி மதிப்பிலான சொத்து வரி முறைகேடு குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பில் பல்வேறு நிலைகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக ஐந்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்குப் பின், நிலைமை மேலும் தீவிரமடைந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.

இந்த சூழ்நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி திடீரென தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா தீர்மானம் மாநகராட்சி அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தொடர்ந்த சர்ச்சைகள், கட்சியின் மரியாதை மற்றும் நிர்வாக நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது, அவர்  ராஜினாமா செய்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக  தகவல் வெளியாகியுள்ளது.