தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன் கூடிய மழை நீண்ட நேரம் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன