மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நவ்யா நாயர், கோழிக்கோடில் நடைபெற்ற ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்தபின், நடிகர் சவுபினுடன் சேர்ந்து நடந்து சென்றபோது, பெரும் கூட்டத்திற்கு இடையே பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு ரசிகர் திடீரென நவ்யாவின் உடலைத் தொட்டார்.

இதனை கண்ட சவுபின் உடனடியாக அந்த நபரைத் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தை எதிர்பார்க்காத நவ்யா, அந்த ரசிகரை கோபத்துடன் முறைத்துப் பார்த்தார், அதன்பின் அவர் அங்கிருந்து விலகிச் சென்றார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் நவ்யாவின் கோபப் பார்வை போதாது என்றும், அந்த நபருக்கு வேறு விதத்தில் பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்றும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் பிரபலங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.