உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தின் பிலாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அலைதத்பூர் தேவா நாக்லா கிராமத்தில் பயங்கரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. விவசாயியான வீர்பால் என்பவர் அவரது சொந்த வயலில் கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது மனைவி சுனிதா தான் தனது காதலர் அன்ஷுவுடன் சேர்ந்து கொலை செய்ததாக வெளியாகியுள்ளது.
சுனிதாவுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளதுடன், காதலர் அன்ஷுவை விட 12 வயது மூத்தவரும் ஆவார். விசாரணையில் சுனிதா கூறியதாவது, “நானும், அன்ஷுவும் அருகருகே நிலம் வைத்திருந்தோம். நான்கு மாதங்களுக்கு முன்பு நெல் நடவு செய்யும் நேரத்தில் நெருக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து உறவு ஏற்பட்டது.
என் கணவரை மது குடிக்க வைத்து வயலுக்கு அனுப்பி, அன்ஷுவை வீட்டுக்கு வரச் சொல்லுவேன்.” சில நாட்களுக்கு முன்பு இருவரையும் சங்கடமான நிலையிலைக் கண்ட வீர்பால், சுனிதாவை தாக்கியுள்ளார். அதிலிருந்து மனதில் கோபம் கொண்ட சுனிதா, “கணவனை விலக்க முடியாவிட்டால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என அன்புக்குரிய காதலரிடம் கூறியுள்ளார்.
அக்டோபர் 13ஆம் தேதி இரவு, வயலுக்கு சென்ற வீர்பாலை, சுனிதாவின் உத்தரவுப்படி, அன்ஷு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். போலீசார் இருவரின் மொபைல் அழைப்பு பதிவுகள் மற்றும் கிராமத்தார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்துள்ளனர். இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், போலீசார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
